உயிர் இருப்பதால்தான் உடம்பு அசைகிறது என்று உணர்வதுபோல். கடவுள் இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது என்று நம்புதல் வேண்டும். கடவுளைக் காட்டு என்றால், உடம்புக்குள் இருக்கும் உயிரைக் காட்டு என்று கேளுங்கள். -வாரியார்
நீரில் மூழ்குகிறவன் சுவாசிப்பதற்கு மிகுந்த ஆவல் கொள்வதுபோல், அவனுக்கு இறைவனையும் உண்மையையும் அறிவதற்குப் பேராவல் வேண்டும். அவன் கடவுளை அடைவதற்கே விரும்ப வேண்டும்; மற்றவற்றையல்ல. மாயத் தோற்றங்கள் தன்னை ஏமாற்றும்படி அவன் அனுமதிக்கக் கூடாது! -விவேகானந்தர்
ஒரு கல்லானது பல நூறு ஆண்டுகள் நீரில் கிடந்தாலும், நீர் அதனுள் ஊறாது. ஆனால் களிமண் நீருடன் சம்பந்தப்பட்டவுடன் அதனுடன் கலந்துவிடுகிறது. அதுபோல பல துஷ்டர்களின் நடுவில்கூட உறுதியான பக்தி உடையவர்களின் குணமானது கலங்குவதில்லை. ஆனால் நம்பிக்கை குறைந்தவனோ ஓர் அற்ப காரியத்திலும் சுலபமாக மனம் கலங்கிவிடுகிறான். -குருவாக்கியம்