Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் ... வைகாசி செவ்வாய்; கோவை பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு வைகாசி செவ்வாய்; கோவை பால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னையில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2026
09:06

சென்னை;  சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் - ஆல்காட் குப்பம் பகுதியில் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை 7:00 மணிக்கு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலச பூஜையை துவக்கி வைத்து வேத மந்திரங்கள் முழங்க, கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த சுவாமிகளுக்கு பூர்ண கும்பம் மற்றும் நாதஸ்வர இசையுடன் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைக்குச் சென்ற சுவாமிகள், வேத மந்திரங்கள் முழங்கக் கடலுக்கு மலர் மற்றும் பழங்களை அர்ப்பணித்து வழிபாடு செய்தார். இதனைத் தொடர்ந்து, எல்லையம்மன் கோயில் பூர்ணாஹுதி மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகளை சுவாமிகள் பார்வையிட்டார். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜையை சுவாமிகள் நடத்தினார். அதன் பின்னர், அங்கு வருகை தந்திருந்த விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆசி வழங்கிய சுவாமிகள், பக்தர்களுக்கு அனுக்ரஹ பாஷணம் (அருளுரை) மற்றும் பிரசாதங்களை வழங்கி ஆசீர்வதித்தார்.

சென்னை விஜயம்; பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் நேற்று மாலை (8 ஜூன் 2026) சுமார் 4 மணியளவில் மயிலாப்பூரில் உள்ள சென்னை சமஸ்கிருதக் கல்லூரிக்கு (Madras Sanskrit College) விஜயம் செய்து அருளாசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து இன்று (9 ஜூன் 2026) காலை 6 மணி முதல் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஸ்திக சமாஜத்தில் பூஜ்ய சுவாமிகள் பக்தர்களுக்குத் தரிசனம் ஆசி வழங்கினார். உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சரும், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடராமன் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி மகாசுவாமிகளைத் தரிசனம் செய்து ஆசி பெற்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar