நரியனேந்தலில் குலதெய்வ வழிபாடு: 10 கி.மீ., நடந்து சென்று நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2026 10:06
சிவகங்கை: சிவகங்கை அருகே நரியனேந்தலில் உள்ள குல தெய்வமான முத்தையா கோவிலில் நேர்த்தி செலுத்த பாரம்பரியம் மாறாமல் கிராமத்தினர் 10 கி.மீ., நடந்தே சென்றனர்.
சிவகங்கை அருகே பெருமாள்பட்டி, இலுப்பக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஒரே சமுதாயத்தினர் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசிக்கின்றனர். இவர்களது குலதெய்வமான முத்தையா கோயில் சிவகங்கையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள நரியனேந்தல் கிராமத்தில் உள்ளது. இவர்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை அக்கோயிலுக்கு நடந்தே சென்று நேர்த்தி செலுத்தி வருவதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர். வைகாசி 1 ம் தேதி விரதத்தை துவக்கி தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு விரதம் இருந்து வந்தனர். விரத காலத்தை முடிப்பதற்காக நரியனேந்தலில் உள்ள முத்தையா சுவாமியை தரிசனம் செய்ய சிவகங்கையில் இருந்து சுவாமிக்கு பலியிடுவதற்காக நேர்ந்து விடப்பட்ட ஆடுகளுடன் நடந்து சென்றனர். இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த 150 ஆடுகள் வரை அழைத்து சென்றனர். தரிசனம் முடித்து 3 நாட்களுக்கு பின் சொந்த கிராமங்களுக்கு திரும்புவார்கள்.