காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் விடையாற்றி உத்சவம் நிறைவு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2026 10:06
காஞ்சிபுரம்; விடையாற்றி உத்சவத்தின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி -– பூதேவியருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோத்சவம், கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், கடந்த மாதம் 30ம் தேதி கருடசேவை உத்சவமும், கடந்த 3ம் தேதி தேரோட்டமும் வெகு விமரிசையாக நடந்தது. பிரம்மோத்சவத்தின் 10ம் நாள் காலை த்வாதச ஆராதனமும், இரவு வெட்டிவேர் சப்பரத்துடன் வைகாசி பிரம்மோத்சவம் நிறைவுபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விடையாற்றி உத்சவத்தின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி -– பூதேவியருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.