சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பெண்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2026 10:06
தங்கவயல்: மாரிகுப்பம் ஸ்ரீ வள்ளி – தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடந்தது.
தங்கவயல் மாரிகுப்பத்தில், ஸ்ரீ வள்ளி – தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. நுாற்றாண்டு பழமைவாய்ந்த இந்தக் கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது.
இதை ஒட்டி, பால முருகன் பக்தபாளையா சபையின் பெண் பக்தர்கள், 203 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். சாம்பியன் ரீப் ரயில் நிலையம் அருகே உள்ள உத்தண்டி அம்மன் கோவிலில் இருந்து பெண் பக்தர்கள் பால்குடங்களை சுமந்தபடி, ‘அரோகரா’ கோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து கோவிலில் படையல் நிகழ்ச்சியும், நேர்த்தி கடன் செலுத்தலும், இரவு தேர் பவனியும் நடந்தது.