Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற ... சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம் சிங்கவரம் ரங்கநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மண்டு காளியம்மன் கோயில் பூ குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி மண்டு காளியம்மன் கோயில் பூ குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2026
03:06

நெய்க்காரப்பட்டி:  பழநி நெய்க்காரப்பட்டி, கே.வேலூர் சுயம்பு மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 34 ஆம் ஆண்டு பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


பழநி, நெய்க்காரப்பட்டி, கே.வேலூர் சுயம்பு மண்டு காளியம்மன்,உச்சி காளியம்மன் கோயில் 34 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மே.26 இரவு 11 மணிக்கு மேல் சாமி சாட்டுதல் முகூர்த்த கால் நடுதல் நடந்தது. மே.27 அன்று பூ குண்டம் இறங்கும் பக்தர்கள் மாலை அணிந்தனர். ஜூன் 5, பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 8, விநாயகர் விழா, நேற்று ஜூன் 9ல் சண்முக நதியில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அன்று இரவு பூக்குழி வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை (ஜூன் 10), அதிகாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழாவில் ஆர்.வாடிப்பட்டி, பெரிய கலையம்புத்தூர், நெய்க்காரப்பட்டி சின்ன கலையம்புத்தூர், அ.கலையம் புத்தூர், அழகாபுரி, பாப்பம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்தல், முடி இறக்குதல், கிடா வெட்டுதல், பூச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். வானவேடிக்கை நடைபெற்றது. நாளை ஜூன் 12 விளக்கு பூஜை நடைபெறும். குண்டம் இறங்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள் சிலர் மயங்கி விழுந்தனர். பழநி-கொழுமம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar