Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ... மானாமதுரை பட்டத்தரசி கிராமத்தில் 38 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு திருவிழா மானாமதுரை பட்டத்தரசி கிராமத்தில் 38 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு தமிழக முதல்வர் விஜய் நாளை வருகை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு தமிழக முதல்வர் விஜய் நாளை வருகை

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2026
02:06

 உடுப்பி: தமிழக முதல்வர் விஜய், உடுப்பி மாவட்டத்தின், பிரசித்தி பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு, நாளை வருகிறார்.

உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவில் உள்ள கொல்லுார் மூகாம்பிகை கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என, பலரும் இக்கோவிலை தரிசனம் செய்துள்ளனர்.  தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மூகாம்பிகையின் தீவிர பக்தர். கோவிலுக்கு தங்கவாள் காணிக்கை செலுத்தினார். மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் வந்தார். இந்நிலையில், தமிழக புதிய முதல்வர் விஜய், இக்கோவிலுக்கு நாளை வருகிறார். முதல்வரான பின், தற்போது, முதன் முறையாக கர்நாடகாவுக்கு வருகிறார். டில்லியில் இருந்து, மதியம் 12:30 மணிக்கு, சிறப்பு விமானம் மூலம், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வரும் அவர், சாலை வழியாக பைந்துாரின், கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்வார். அங்கு நடக்கும் சிறப்பு பூஜைகளில் அவர் பங்கேற்பார். பின், மங்களூரு விமான நிலையத்துக்கு திரும்பி, சிறப்பு விமானத்தில் சென்னைக்கு செல்வார்.

தமிழக முதல்வர் விஜய் வருவதால், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு, கர்நாடக போலீசாரிடம் தமிழக போலீசார், நேற்று, வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடுப்பி மாவட்ட போலீஸ் துறையும், மூகாம்பிகை கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தமிழக முதல்வர் விஜய் பயணிக்கும் பாதை, மூகாம்பிகை வனப்பகுதியாகும். சவுபர்ணிகா ஆற்றின் நீர் பிடிப்பு பகுதி அருகில் உள்ள வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் நபர்களை கண்காணிக்கும்படி, வனத்துறை ஊழியருக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, விஜய் பயணிக்கும் விமான நிலையம், கோவில் வளாகம், பயண பாதைகளில் வாகன சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar