காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகிரதீஸ்வரர் கோவிலில், காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் நேற்று துாய்மை பணி மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் பி.எஸ்.கே.,தெருவில் ஆதி பூதநாதன் என, அழைக்கப்படும் பகிரதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் துாய்மை பணி மேற்கொண்டனர். இதில், கோவில் வளா கத்தில் குவிந்திருந்த குப்பைகளையும், தேவையற்ற செடிகளையும் அகற்றினர். கோவில் கோபுரங்களின் மீது படிந்திருந்த துாசுகளையும், பிற விக்ரஹங்களையும், பூஜை பொருட்கள், சுவாமி அலங்கார பொருட்களை சுத்தப் படுத்தினர்.