திருநாங்கூரில் 7 நாள் தெப்ப உற்சவம் துவக்கம்; திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2026 09:06
மயிலாடுதுறை; திருநாங்கூரில் 7 நாள் தெப்ப உற்சவம்- முதல் நாள் திருவன்புருஷோத்தம பெருமான், மணவாள மாமுனிகளுடன் தெப்பத்தில் எழுந்தருள கோலாகலமாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநாங்கூரில் திரு வன்புருஷோத்தம பெருமாள் கோவிலில் உள்ள தனித் சன்னதியில் மணவாள மாமுனிகள் எழுந்தருளியுள்ளார். அவரது 656 வது திருநட்சத்திர நடை முன்னிட்டு திருநாங்கூர் ஏழு கோவில் ஆதினத்திற்கு உட்பட்ட ஏழு திவ்ய தேச பெருமாள் தினத்திற்கு ஒரு பெருமாள் மணவாள மாமுனிகளுடன் சேர்ந்து எழுந்தருள திருப்பாற்கடலில் தெப்ப உற்சவம் நேற்று 21 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று திருவன் புருஷோத்தம பெருமான் மணவாள மாமுனிகள் சன்னதியில் எழுந்தருவர் மாமுனிகள் மங்களாசாசனம் செய்த பின்னர் அவருக்கு பெருமான் பகுமான மரியாதை முடிந்து திருவந்திகாப்பு நடைபெற்றது இரவு கோவிலில் இருந்து பெருமாள் மாமுனிகளுடன் வீதியுலாவாக சென்று திருப்பாற்கடலில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருள தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும் மாமுனிகளையும் தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை ஏழு கோவில் தேவஸ்தான பரம்பரை ஆதீன தர்மகர்த்தாக்கள் ரங்கநாதன், கண்ணன், கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் செய்திருந்தனர்.