கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடக்கிறது.கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் சக்தி விநாயகர் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவில் ராஜகோபுரம் புதியதாக அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடக்கிறது.அதையொட்டி கோவில் முன்பு யாக சாலையில் ஏழு யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இன்று (25ம் தேதி) காலை 8 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், புண்ணியாகவாஜனம், கணபதி, மகாலட்சுமி, நவநாயகர் தெய்வங்களுக்கு யாகம் நடத்தப்படுகிறது. மாலை கூர்வாங்க பூஜைகள், கும்ப கலசங்களுடன் யாகசாலை பிரவேச பூஜைகள் நடக்கிறது.வரும் 27ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.