Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...  கிளியூர் நந்தகோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் கிளியூர் நந்தகோபாலகிருஷ்ணன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2026
08:06

 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் தாலுகா வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

வீரக்கல்லில் ஒக்கலிகர் காப்பு படவனவார் குல தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட சவுடம்மன் கோயில் உள்ளது. இங்கு செல்வ விநாயகர், சுந்தரேஸ்வரர், காலபைரவர் சன்னதிகளும் உள்ளன. 2012ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போதைய கும்பாபிஷேக திருப்பணியில் கூடுதலாக தெப்பக்குளமும் அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக நடந்த திருப்பணி நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் ஜூன் 21ல் பண்டார பேழை, தீர்த்தம் அழைப்புடன் துவங்கியது. நேற்று காலை வரை 4 கால யாக சாலை பூஜைகள் நடந்த நிலையில் கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் தலைமை சிவாச்சாரியர் குருநாத குருக்கள் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் வேடசந்துார் சாமிநாதன், நிலக்கோட்டை அய்யனார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவரும், வேடசந்துார் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான காந்திராஜன், படவனவார் குல சங்கத்தலைவர் ராமசாமி, செயலாளர் முத்துச்சாமி, இணை செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் சிவசுப்ரமணியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகன், சவுடப்பன், துணைத்தலைவர் வேல்வழுதி, துணைச்செயலாளர்கள் ராஜன், ரவிச்சந்திரன், சட்ட ஆலோசகர்கள் முருகேசன், லோகநாதன், தணிக்கையாளர் சவுடையா, குழு உறுப்பினர் விட்டல்நாயக்கன்பட்டி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar