வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2026 08:06
வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று வருடாபிஷேக விழா நடந்தது. பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் யாக சாலையில் வைத்து கணபதி, விக்னேஸ்வர பூஜைகள், ருத்ர, பிரயசித்த, பஞ்ச சுத்த, பூர்ணாகுதி ஹோமங்கள் நடந்தன. பின்னர் மாலையில் திருக்கல்யாணம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர்.