திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2026 11:06
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஆனி பெருந்திருவிழா ஜூன் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தின்போது, ஆசியாவிலேயே அதிக எடை கொண்டதாக கருதப்படும் சுவாமி நெல்லையப்பர் தேர் உள்பட 5 தேர்கள் ரதவீதிகளில் வலம் வரும். சிறப்பு மிக்க இந்த ஆனி தேரோட்டம் இன்று 28ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்களை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.