திருப்போரூர்; கங்கையம்மன் கோவிலில் தெப்பல் திருவிழாவிற்கான தெப்பம் கட்டும் பணி நடக்கிறது. திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், ஸ்ரீ கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், இன்று கூழ்வார்த்தல் திருவிழாவும், நாளை தெப்பல் திருவிழாவும் நடக்க உள்ளது. நாளை காலை அம்மன் கரகம் அலங்காரத்துடன் வீதியுலா வந்து கங்கையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மாலை 3:00 மணிக்கு கூழ்வார்த்தல் விழா நடைபெறும். தொடர்ந்து, 29ம் தேதி நடைபெறும் தெப்பல் விழாவில், மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகத்துடன், அலங்காரம் நடக்கிறது. இரவு 7 :00 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, கோவில் அருகே உள்ள குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் அம்மன் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வருவார். 9:00 மணிஅளவில் தேர் வீதி உலா நடக்கிறது. தெப்பல் திருவிழாவிற்காக, தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.