குகை ஒன்றில் தங்கி இருந்தது ஒரு கருங்குரங்கு. பகல் நேரத்தில் குகையின் வாசலில் உட்கார்ந்திருக்கும். அதைக் கண்ட இன்னொரு குரங்கு இந்த குகையில் நாம் இருந்தால் நன்றாக இருக்குமே என ஆசைப்பட்டது.
நன்றாக சாப்பிட்டது போல் வயிறை புடைப்பாக்கி, ‘நான் வரும் வழியெங்கும் மரங்களில் பழங்கள் நிறைந்திருப்பதைக் கண்டேன். வயிறார பறித்து சாப்பிட்டேன். நீயும் போய் சாப்பிட்டு சந்தோஷமாக இரு’’ என கவர்ச்சியாக பேசியது. கருங்குரங்கும் ஆசையுடன் உடனே புறப்பட்டது. ஏமாற்றத்துடன் திரும்பியது. மரத்தில் பழமும் இல்லை. தான் வாழ்ந்த குகையும் போச்சு என்ற உண்மை புரிந்தது. பொய் பேச்சுக்கு மயங்காதே.