* பிறர் செய்யும் தீமையை பொறுத்துக்கொள். * இனிய நாக்கு எலும்பையும் நொறுக்கும். * தேனாக இருந்தாலும் அளவுடன் சாப்பிடு. * இனிய சொற்கள் மனம், உடம்புக்கு பலம் தரும். * எதையும் பரிசோதித்திடு; நல்லதை மட்டும் கடைப்பிடி. * நன்றியறிதல் உன்னை பாதுகாக்கும். * நன்மை என தெரிந்தும் அதை பின்பற்றாமல் இருப்பது பாவம். * ஒவ்வொரு செயலும் நம்பிக்கையால் நடக்கிறது. * இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குவான்.