Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி கிராமக்கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி கிராமக்கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
04:07

திருப்புல்லாணி ; திருப்புல்லாணி அருகே பத்திராதரவை கிராமத்தில் உள்ள ராதே கிருஷ்ணா கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.


புதியதாக கோயில் திருப்பணி கட்டுமான பணிகளுக்கு பின்னர், கடந்த ஜூன் 29 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. பகவத் பிரார்த்தனை, அக்னி பிரதிஷ்டை, சுப்ரபாதம், மகா சாந்தி, சாற்று முறை உள்ளிட்ட நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு யாத்திரா தானம், கடம் புறப்பாடு உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10:45 மணிக்கு கோயில் கோபுர விமான கலசத்தில் அரியக்குடி ஸ்ரீதர் பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் ராதே கிருஷ்ணாவிற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பத்திராதரவை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


* வண்ணாங்குண்டு அருகே செல்வனூரில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 1 முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை முனீஸ்வரர், கருப்பண்ணசாமி கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை செல்வனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


* உத்தரகோசமங்கை அருகே மாலங்குடி கிராமத்தில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பூர்ணாஹூதி, எந்திரப் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல், சுப்ரபாதம் உள்ளிட்டவர்கள் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பட்டு பாமா ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணன் கோபுர விமான கலசத்தில் பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர்களுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்று முறை கோஷ்டி பாராயணம், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாலங்குடி யாதவர் சங்கம் மற்றும் யாதவ இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
திருவோண விரதம் என்பது மகாவிஷ்ணுவை வழிபட சிறந்த தினமாகும். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: திம்மையா சாலை காசி விஸ்வநாதேஸ்வர் கோவிலில், 154ம் ஆண்டு விழா, ஜூலை 3, 4ல் ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் தேவஸ்தானத்தில் ஸ்ரீமந் நாராயணீயம் ஆன்மிக சொற்பொழிவு நேற்று மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar