தூத்துக்குடி:தூத்துக்குடியில் ஸ்ரீ வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் அமைந்துள்ள விநாயகருக்கு அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. 21, 22ம் தேதி முதல்நாள், 2ம் நாள், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 23ம் தேதி காலை நாலாவது கால யாகசாலை பூஜையும், ஸர்வாஹதி மஹா பூர்ணாஹதி, யந்தரஸ்தாபனம், கும்பம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து காலை அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், தீப ஆராதனை பிரசாதம் வழங்கல் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஏழு மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா முருகன்யாதவ், முத்தம்மாள் மற்றும் குடும்பத்தினர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை பாஸ்கர சங்கரவாத்தியார் தலைமையில் குழுக்கள் செய்தனர். ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய அர்ச்சகர்கள் ஹரிஹரன்சுந்தர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.