Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் கெங்கையம்மன் கோவிலில் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவண்ணாமலை ஆதி அண்ணாமலையார் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவண்ணாமலை ஆதி அண்ணாமலையார் வீதி உலா

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2026
05:07

திருவண்ணாமலை; கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில்  முடிந்த கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆதி அண்ணாமலையார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த, 2012ல் நடந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக, 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவிலில் புனரமைப்பு பணி நடந்து வந்தது. இதையடுத்து நேற்று கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த மாதம், 26ல் விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை, 6ம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, யாகசாலையில் வைத்த புனித கலச நீரால், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, கோவில் கோபுர விமான கலசங்களுக்கு  கும்பாபிஷேகம் நடந்தப்பட்டது.  பின் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சன்னதி விமானங்களுக்கு கலச புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷமிட்டு வழிபட்டனர். விழாவில் பக்தர்களுக்கு டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடத்தப்பட்டது. இரவு, சுவாமி திருக்கல்யாயம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆதி அண்ணாமலையார், அன்ன வாகனத்தில் ஆதிபராசக்தி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar