Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடுவீரப்பட்டு மலையாண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பிரதமர் மோடி 5 அன்பு கட்டளை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பிரதமர் மோடி 5 அன்பு கட்டளை!

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2026
10:07

புதுடில்லி: அமர்நாத் புனித யாத்திரையின் போது இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்களை பின்பற்றுமாறு பக்தர்களை மோடி வலியுறுத்தினார்.


ஜம்மு - காஷ்மீரின் இமயமலை பகுதியில், 12,730 அடியில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை வருகின்றனர். நடப்பாண்டுக்கான யாத்திரையை, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, அங்குள்ள பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார். பக்தர்களுக்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த யாத்திரை, வரும் ஆகஸ்ட், 28ல் நிறைவடைகிறது. பக்தர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: அமர்நாத் யாத்திரையை ஒரு மதப் பயணத்தை விட மேலானது. இது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை விவரிக்கிறது. 


இந்த புனித யாத்திரை ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களை அன்போடும் உபசரிப்போடும் வரவேற்கும் ஜம்மு காஷ்மீர் மக்களைப் பாராட்டுகிறேன். யாத்திரை சீராக நடைபெறுவதை உறுதி செய்வதில் ஈடுபட்டிருந்த ராணுவம், போலீசார், பேரிடர் மீட்புக் குழுக்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


யாத்திரையின் போது இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்களை பின்பற்றுமாறு பக்தர்களை மோடி வலியுறுத்தினார். அதன் விபரம் பின்வருமாறு:


1.இமயமலைப் பகுதி மற்றும் புனித யாத்திரைப் பாதைகளின் தூய்மையைப் பேணி, அவற்றின் இயற்கை அழகைப் பாதுகாக்க வேண்டும்.


2. அதிகாரிகளால் வெளியிடப்படும் அனைத்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும்.


3. ஜம்மு காஷ்மீரில் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த, உள்ளூர் தயாரிப்புகளையும் வணிகங்களையும் ஆதரிக்க வேண்டும். 


4. புனிதப் பயணம் முடித்து வீடு திரும்பியதும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது அன்புக்குரியவர்களின் பெயரில் ஒரு மரக்கன்றை நடுங்கள்.


5. யாத்திரையின் போது ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு 5 கட்டளைகளை பக்தர்களுக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar