ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2026 04:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக பூஜைகள் இன்று முதல் துவங்கி, 5ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று காலை முதல் யாகசாலை பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். வருஷாபிஷேக பூஜைகள் நாளை (ஜூலை 5) வரை 3 நாட்கள் வரை நடக்கிறது.