கோவை: ராம்நகர் ராமர் கோயிலில் உள்ள அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் ‘ஸ்ரீமந் நாராயணீயம்’ என்ற தலைப்பில் ஆன்மிக தொடர் செற்பொழிவு நடந்து வருகிறது.
பகவானின் அவதாரங்களில் ராம அவதாரமும், கிருஷ்ணா அவதாரமும்தான் புண்ணிய அவதாரங்கள். நாம் பிறந்த இந்த கர்ம பூமியில்தான் பகவானும் பிறந்தார். அப்படி என்றால் நாமும், பகவானும் ஒன்றுதானே என்று கேட்டால் அது தவறு. ராமனும், கிருஷ்ணனும் எடுத்தது பிறப்பு அல்ல; அது அவதாரம். இந்த உலகத்துக்கு சுபிட்சம் அளிக்க அவர்கள் அவதரித்தார்கள். நாம் செய்த கர்ம ஜென்ம புண்ணியத்தால் ஒரு குடும்பத்தில் மனிதர்களாக பிறக்கிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.