Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை ... கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு கோவை கொடிசியா திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2026
11:07

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.


சிவகாசி அருகே திருத்தங்கலில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆனி பிரம்மோற்சவ திருவிழா ஜூன் 25 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமிகள் சிம்ம, யானை, சேஷ உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 9 ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள், செங்கமலத்தாயார் எழுந்தருள பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற பக்தி கோஷம் முழங்கியபடி தேரை இழுத்து வழிபட்டனர். பெண் பக்தர்கள் பஜனை பாடியும், கோலாட்டம் ஆடியும் வந்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து திருவிழா மூன்று நாட்களுக்குப் பின்பு புஷ்ப யாகத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ஶ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயில் ததியாராதனை டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar