பஞ்சந்தாங்கி முத்து மாரியம்மன், காஞ்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2026 06:07
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஊராட்சிக்குட்பட்ட பஞ்சந்தாங்கியில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. பஞ்சந்தாங்கியில் உள்ள முத்து மாரியம்மன் மற்றும் காஞ்சி அம்மன் கோயிலில் நேற்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. பூர்ணாஹுதி, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவைகளுக்கு பிறகு இன்று காலை 7:25 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால பூஜை நடந்தது. காலை 10:30 மணிக்கு கடம் புறப்பட்டு முத்து மாரியம்மன், காஞ்சி அம்மன் கோயில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பகலில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பஞ்சந்தாங்கி யாதவர் சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.