Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமி 20ல் ... திருநள்ளாறு கோவிலில் தேவகவுடா தரிசனம் திருநள்ளாறு கோவிலில் தேவகவுடா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லுார் மூகாம்பிகையை தரிசித்தார் கேரள முதல்வர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொல்லுார் மூகாம்பிகையை தரிசித்தார் கேரள முதல்வர்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2026
12:07

உடுப்பி: தமிழக முதல்வர் விஜயை தொடர்ந்து, கேரள முதல்வர் சதீஷன், கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு நேற்று வந்து, தரிசனம் செய்தார். உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவின், கொல்லுாரில் உள்ள மூகாம்பிகை கோவில், பிரசித்தி பெற்ற தீர்த்த தலமாக விளங்குகிறது, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளின் நம்பிக்கைக்குரிய திருத்தலமாக மாறியுள்ளது. இதற்கு முன் பல்வேறு அரசியல் தலைவர்கள், பல மாநிலங்களின் முதல்வர்கள், இங்கு வந்து தரிசனம் செய்தனர்.

மூகாம்பிகையை தரிசித்தால், வெற்றி கிடைக்கும் என்பது, அரசியல் தலைவர்களின் நம்பிக்கையாகும். கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் நடக்கும் சண்டிகா யாகத்துக்குசிறப்பு சக்தி உள்ளதாக ஐதீகம். அரசியல் எதிரிகளை பணிய வைக்க, ஆட்சியில் ஏற்படும் இடையூறுகளை சரி செய்யவும், இங்கு யாகம் நடத்துவது வழக்கம்.தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய், சமீபத்தில் கொல்லுாருக்கு வந்து, மூகாம்பிகையை தரிசனம் செய்தார்.

கேரளாவின் புதிய முதல்வர் சதீஷன், இசட் – பிளஸ் பாதுகாப்புடன், நேற்று அதிகாலை மூகாம்பிகை கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்தார். சிறப்பு பூஜைகள் நடத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம், சிறப்பான வரவேற்பு அளித்தது. கேரள முதல்வர் வருகை காரணமாக, கோவிலின் சுற்றுப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் பார்த்து கொண்டனர். மூகாம்பிகையை தரிசித்த பின், முதல்வர் சதீஷன் சாலை வழியாக மங்களூருக்கு சென்றார். அங்கிருந்து விமானத்தில், திருவனந்தபுரம் புறப்பட்டார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar