முதுகில் அலகு குத்தி பழநிக்கு தேர் இழுத்து செல்லும் அய்யலூர் பூசாரி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2013 11:01
வடமதுரை: அய்யலூர் தீத்தாகிழவனூர் பேசும்பழனியாண்டவர் கோயிலில் தைப்பூச விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அக்கினிசட்டி, பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. தைப்பூசத்தை முன்னிட்டு, இக்கோயிலில் இருந்து ஆண்டுதோறும் முருகன் கோயிலுக்கு நூற்றுக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். இந்தாண்டு பூசாரி வெங்கடேசன் முதுகில் அலகு குத்தி, பழநிக்கு தேர் இழுத்து சென்றார். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். இவர்கள் எரியோடு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் வழியே வரும் 31ம் தேதி பழநி சென்றடைவர். இதுதவிர நேர்த்திகடனுக்காக பக்தர்கள் சிறிய ரக தேர்களை முதுகில் அலகு குத்தி அய்யலூர் கடைவீதியை வலம் வந்தனர். சிலர் 22 அடி நீள அலகை வாயில் குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.