Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் துணை கோவில்களில் ... காஞ்சி ஏகாம்பரநாத சுவாமி கோவில் தங்கத் தேரோட்டம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு காஞ்சி ஏகாம்பரநாத சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கொடிசியா ஜெகந்நாதர் கோயிலில் சிறப்பு திருமஞ்சன சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை கொடிசியா ஜெகந்நாதர் கோயிலில் சிறப்பு திருமஞ்சன சேவை

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2026
11:07

கோவை கொடிசியா ஜெகந்நாதர் கோயிலில் சிறப்பு திருமஞ்சன சேவை


கோவை; கொடிசியா அருகே உள்ள ஜெகந்நாதர் கோயிலில், பகவான் ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவியாருக்கான திருமஞ்சன சேவை கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் தயார் செய்த 1008 உணவுப்பதார்த்தங்கள் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 


அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (ஹரே கிருஷ்ணா அமைப்பினர்) கோவையில் நடத்தவுள்ள ஜெகன்னாதர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பகவான் ஜெகன்னாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியாருக்கான திருமஞ்சன சேவை (ஸ்னான யாத்திரை), கொடிசியா அருகேயுள்ள இஸ்கான் ஜெகன்னாதர் ஆலயத்தில் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. பக்தி வினோத சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.


ஒடிஷா மாநிலம் பூரி நகரில் ஒவ்வோர் ஆண்டும் ஜெகன்னாதர் தேர்த்திருவிழாவிற்கு முன்பாக நடைபெறும் பாரம்பரிய ஸ்னான யாத்திரையைப் பின்பற்றி, மரத்தினாலான ஸ்ரீ ஜெகன்னாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியாருக்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே செய்யப்படும் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் இடைவிடாது ஹரே கிருஷ்ண மகாமந்திரத்தையும், "ஜெய் ஜெகன்னாத்" என்ற கோஷத்தையும் முழங்கியபடி ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தனர். சங்குகள் முழங்க, இந்தியாவின் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீராலும், பலவகை மலர்களாலும் பகவானுக்கு சிறப்பான திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஜெகன்னாதர் பெருமானின் திவ்ய லீலைகள் குறித்து ஆன்மீக உரை நடைபெற்றது.  இந்த ஆண்டிற்கான ஸ்ரீ ஜெகன்னாதர் தேர்த்திருவிழா வரும் 18ம் தேதி கோவையில் சிறப்பாக நடைபெற உள்ளது என்று இஸ்கான் அமைப்பினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar