* யாராவது பொய் சொல்லி வியாபாரம் செய்தால், அது வியாபாரத்தை கெடுத்து விடும். * ஒருவன் நோயாளியாகி விடுகிறான். அப்போது நற்செயலை பதிவு செய்யும் வானவருக்கு ஒரு கட்டளை வரும். ‘இவன் முன்பு சுகமாக இருக்கும் போது செய்த நற்செயல்களின் நன்மைகள் இப்போதும் கிடைக்கட்டும்’ என்பதே அது. * பெண்ணானவள் தன் தலை, உடலை ஆடையால் மறைத்துக் கொள்ளாத வரை, அவளின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. * உழைப்பாளியின் கூலியை கொடுக்க தாமதம் செய்வது அநியாயம். * குடும்பத்தைக் காப்பாற்ற உழைத்து சம்பாதிப்பவர் பிரகாசமான முகத்துடன் இறைவனை சந்திப்பர்.