பதிவு செய்த நாள்
30
ஜன
2013
10:01
வடலூர்: வடலூர் அடுத்த மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனத்தில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய ஞானசபையில் 142வது தைப்பூச ஜோதி தரிசனம் கடந்து 27ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தரும சாலையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழையை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மீனவர் சமுதாய மக்கள் சுமந்து öசுன்றனர். பல்லக்கு பார்வதிபுரம், செங்கால் ஓடை, கருங்குழியில் வள்ளலார் வணங்கிய பொருமாள் கோவில், பிள்ளையார் கோவில், அவர் தண்ணீரில் விளக்கேற்றிய இல்லம், தீஞ்சுவை ஓடை வழியாக சித்திவளாகம் சென்றது. மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில், வள்ளலார் சித்தி பெற்ற அறையின் முன் வைத்து பகல் 1:30 மணிக்கு திருஅறை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்லக்கு மீண்டும் தருமசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருஅறையை அயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 7 மணி வரை திருஅறை தரிசனம் நடந்தது. குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ., சொரத்தூர் ராஜேந்திரன், தாசில்தார் மங்கலம், நகர செயலர் ராமலிங்கம், கருங்குழி ஊராட்சி தலைவர் சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.