திரவுபதி அம்மன் கோவில் விழா அமைச்சர் தீ மிதித்து நேர்த்திக்கடன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2026 10:07
கடலுார்: கடலுார் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், அமைச்சர் ராஜ் குமார் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 19ம் தேதி பகாசூரன் வதை நிகழ்ச்சி நடந்தது. 22ம் தேதி அம்மன் திருக்கல்யாணம், நேற்று முன்தினம் கரகத் திருவிழா, அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று மாலை தீமிதி திருவிழா நடந்தது. அமைச்சர் ராஜ்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை 11:00 மணிக்கு கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.