கருட வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2026 10:07
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. கோயிலில் தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். நேற்று இரவு பெரிய திருவடியான கருட வாகனத்தில் பரமபத நாதனாக எழுந்தருளினார். பின்னர் இரவு 7:00 மணிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.