Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திட்டக்குடி புத்தேரி மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாயநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
எழுத்தின் அளவு:
கைலாயநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2026
11:07

அணைக்கட்டு: ஒடுகத்துார் அருகே, சிவன் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நேற்று நடந்தது. வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்திரகாவேரி ஆற்றங்கரையோரம் 2,000 ஆண்டு பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவில் உள்ளது.


காசிக்கு நிகரான இக்கோயிலில் விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வருகிறது. மேலும் பிரதோஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இங்கு தரிசனம் செய்வார்கள். கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் கடைசி அல்லது வைகாசி மாதம் தொடக்கத்தில் மூலவர் சிவபெருமான் மீது சூரியஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வைகாசி மாதம் முதல் நாளே சூரியஒளி சிவபெருமான் மீது விழுந்து தொட்டு வணங்கும் அபூர்வ நிகழ்வு நடந்தது. அதன் பிறகு ஆடி மாதம் 8ம் நாளான நேற்று காலை மூலவர் சிவன் மீது மீண்டும் சூரிய ஒளி விழுந்து தொட்டு வணங்கும் அபூர்வ நிகழ்வு நடந்தது. மேலும், காலை 6:00 மணிக்கும் தொடங்கும் இந்த நிகழ்வு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. பின், மூலவருக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அபூர்வ நிகழ்வை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாத வளர்பிறை ஏகாதசி ‘சயன ஏகாதசி’ அல்லது ‘தேவ சயன ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ... மேலும்
 
temple news
புதுச்சேரி: வாழைக்குளம் செங்குழுநீர் அம்மன் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது.புதுச்சேரி, ... மேலும்
 
temple news
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. கோயிலில் தினமும் ... மேலும்
 
temple news
 கடலுார்: கடலுார் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், அமைச்சர் ராஜ் குமார் தீ மிதித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar