சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் திருவிளக்கு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2026 11:07
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி தலைமை வகித்தார். சிங்கம்புணரி நாட்டார்கள் முன்னிலை வகித்தனர். பெண்கள் இப்பூஜையில் பங்கேற்றனர். மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. யாகம், பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.