Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் பெருமாள் முதலில் ... திருவாலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி திருவாலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி பெருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி பெருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2026
02:07

திருப்போரூர்: நெல்லிக்குப்பத்தில் வேண்டவராசி அம்மன் கோவிலில், 67ம் ஆண்டு ஆடி பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.

திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், 67ம் ஆண்டு ஆடி பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி காலை 4:00 மணிக்கு, மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில், 5:00 மணிக்கு, இரண்டாம் கால மஹா பூஜை, பூர்ணாஹுதி நடந்தது.

அன்னை வேண்டவராசி மூலவருக்கு 108 சங்கு அபிஷேகமும், 7:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

பின் 9:00 மணிக்கு, 308 பால்குடம் மற்றும் தீர்த்தம், திருமண்டப திருக்குளத்திலிருந்து கொண்டுவந்து உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து விசேஷ அலங்காரமும் , தீப துாப ஆராதனையும் நடந்தது.

பகல் 1:00 மணிக்கு கூட்டு வழிபாடு தீப துாப ஆராதனையும் நடந்தது. மாலை ஊஞ்சல் சேவையும், இரவு அம்மன் வீதி உலா வைபவமும் நடந்தது.

விழாவில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar