Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடுக்கு பிள்ளையார் கோவிலில் ... உத்திரமேரூர் முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் உத்திரமேரூர் முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றல் வைபவம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றல் வைபவம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2026
05:07

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றல் வைபவம் கோலாகலமாக நடந்தது.


பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நடக்கிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு பெருமாள் மாப்பிள்ளை திருக்கோலத்தில் யானை வாகனத்தில் அமர்ந்தார். பின்னர் ரத வீதிகளில் உலா வந்து 8:30 மணிக்கு கோயிலை அடைந்தார். அங்கு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் வைபவம் பக்தர்கள் மத்தியில் கோவிந்தா கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. அப்போது திருமண வரன் தேடுவோர் மற்றும் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மகா தீபாராதனைகள் நிறைவடைந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பூ பல்லக்கில் பட்டணப்பிரவேசம் வந்து அருள்பாலிப்பார். நாளை காலை நவநீதகிருஷ்ணன் சேவையும், இரவு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் அருள்பாலிக்க உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் உலக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கேரள மாநிலத்தில் மேற்கொண்ட தொடர் ஆன்மிக பயணங்களையும், மக்கள் வழிபாட்டு நிகழ்வுகளையும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சீனமங்கலம் எஸ்.சொக்கநாதபுரம் நகரத்தார் 300க்கும் ... மேலும்
 
temple news
 சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கருவலூர்; கருவலூர் ஸ்ரீ கமலாம்பிகை உடனமர் கங்காதீஸ்வரர் கோவிலில் அவிநாசி சைவ மகா சபை திருவாசக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar