Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பியநல்லூர் செம்பியம்மன் மாதேவி ... வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக் குண்டம் திருவிழா நடைபெறாது வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் திருப்பணியில் மெத்தனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் திருப்பணியில் மெத்தனம்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2026
05:07

சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் திருப்பணிகள் ஹிந்து சமய அறநிலைய துறையின் மெத்தனத்தால் மூன்று ஆண்டுகளாக மந்த நிலையில் நடந்து வருகிறது. திருப்பணிகள் நிறைவு பெறாததால் திருவிழா முழுமையாக நடைபெறவில்லை என பக்தர்கள் குமுறுகின்றனர்.


குச்சனூரில் சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளிய ஸ்தலம். சனீஸ்வர பகவானுக்கென தனிக் கோயில் இங்கு மட்டுமே உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஆடிப்பெருந் திருவிழா நடைபெறும். இத் திருவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக ரத்து செய்யப்படுள்ளது. திருவிழா ரத்து செய்யும் ஹிந்து சமய அறநிலைய துறையின் அறிவிப்பை எதிர்த்து உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஒருவர் தொடர்ந்ததால் சில நிகழ்ச்சிகள் தவிர்த்து திருவிழா நடத்த கோர்ட் உத்தரவிட்டது. வேறு வழியின்றி ஹிந்து அறநிலைய துறையும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வுகள் இல்லை: இருந்த போதும் திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாத நிலை உள்ளது. முழு அளவில் திருவிழா நடைபெற கொடிமரம் மீண்டும் வைக்க வேண்டும். திருப்பணிகள் நிறைவு பெறும் போது தான் கொடி மரம் வைக்க முடியும். ஆனால் திருப்பணிகள் மந்த நிலையில் மேற்கொண்டு வருகின்றனர் . இது தொடர்பாக கோயில் பணியாளர்களிடம் விசாரித்த போது, ‘திருப்பணி வேலைகள் பல்வேறு காரணங்களால் தாமதமாகி விட்டது. தற்போது பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,’ என்கின்றனர்.


திருப்பணிகளில் தாமதம் ஏன்: பிரசித்தி பெற்ற ஒரு கோயிலின் திருப்பணிகள் விஷயத்தில் ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக பத்தர்கள் புகார் சாட்டுகின்றனர். கோயில் திருப்பணியில் கால தாமதம் ஏன் என்பது புரியவில்லை. விரைந்து திருப்பணிகளை முடித்து, ஆடிப் பெருந்திருவிழாவை முழுமையாக நடத்த நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar