Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஆடி பவுர்ணமி; முழுநிலவில் ... காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆடி பவுர்ணமி; கருட வாகனத்தில் சுவாமி காஞ்சி யதோக்தகாரி பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் ஆடிப்பௌர்ணமி; கள்ளழகர் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
அழகர்கோவிலில் ஆடிப்பௌர்ணமி; கள்ளழகர் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
10:07

மதுரை; மேலூர் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில், ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீகள்ளழகர் திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.


மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில், ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீகள்ளழகர் திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமாலிருஞ்சோலையில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் எனப்படும் ஸ்ரீகள்ளழகர் திருக்கோவிலில், ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழா கடந்த ஜூலை 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ஸ்ரீகள்ளழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி உற்சவ மூர்த்தியான ஸ்ரீகள்ளழகர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர், 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் தேவியருடன் எழுந்தருளிய ஸ்ரீகள்ளழகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்த திருத்தேர், மீண்டும் தேரடி நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் கைகளைத் தட்டி பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோவில் நிர்வாகம் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 100-க்கும் மேற்பட்ட மருத்துவம், சுகாதாரம், வருவாய்த்துறை பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் அவசர சேவையில் ஈடுபட்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் பாதுகாப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் விழா நிகழ்வுகளை எளிதாகக் காணும் வகையில் 6 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இந்த திருத்தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீகள்ளழகர் தரிசனம் செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
ஆடி பவுர்ணமியன்று அனுஷ்டிக்கும் விரதம் சிறப்பானது. அன்று விரதம் இருப்பவர்கள் குல தெய்வம் அல்லது ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள், கருட சேவையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பட்டினத்தார் திருக்கோவிலில், ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் மாதந்தோறும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar