Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி யதோக்தகாரி பெருமாள் ... காளஹஸ்தி சிவன் கோவிலில் கைலாச கிரி பிரதட்சிணம்; பக்தர்கள் கிரிவலம் காளஹஸ்தி சிவன் கோவிலில் கைலாச கிரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் ஆடி உத்திர நட்சத்திர குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் ஆடி உத்திர நட்சத்திர குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
10:07

சென்னை: சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பட்டினத்தார் திருக்கோவிலில், ஆடி மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற குருபூஜை விழா இன்று மிகுந்த பக்தி பரவசத்துடன் மற்றும் கோலாகலமாக நடைபெற்றது.


அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக கோவிலுக்கு வருகை தந்து பட்டினத்தாரை தரிசித்து வழிபட்டனர். காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. இதனை முன்னிட்டு, திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் திருக்கோவிலில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் திருமுறைகளை பல்லக்கில் வைத்து மேளதாளம் முழங்க தேவார திருமுறை பாராயணத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர். சன்னதி தெருவில் தொடங்கிய இந்த ஆன்மிக ஊர்வலம் நான்கு மாடவீதிகள் மற்றும் முக்கிய சாலைகள் வழியாக சென்று, கடற்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பட்டினத்தார் கோவிலை வந்தடைந்தது. பின்னர், மூலவர் பட்டினத்தாருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கரும்பு, மலர்கள் மற்றும் பல்வேறு அலங்காரங்களால் பட்டினத்தார் எழிலுற அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar