Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை பாரதீய வைதீக மகாஜன சபா சார்பில் ... கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் வியாச பூஜை; ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கிய சங்கராச்சாரியார்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சியில் வியாச பூஜை; ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கிய சங்கராச்சாரியார்கள்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
11:07

  காஞ்சிபுரம்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும், குருபூர்ணிமா தினத்தையொட்டி, ஒரிக்கையில் உள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில், சாதுர்மாஸ்ய விரதத்தை நேற்று தொடங்கினர்.

துறவியர்கள் தங்கள் ஆன்மிக பலத்தை மேலும் பெருக்கிக் கொள்ள அனுஷ்டிக்கும் விரதம் சாதுர்மாஸ்ய விரதம். இந்த விரதத்தை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும் நேற்று, காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் தொடங்கினர்.

குருபரம்பரையினருக்கு செய்யும் வியாச பூஜையுடன் சாதுர்மாஸ்ய விரதம் தொடங்கியது.

ஸ்ரீகிருஷ்ண பஞ்சகா, திராவிடச்சாரியா பஞ்சகா, வியாச பஞ்சகா, குரு பஞ்சகா, சங்கராசாரியா பஞ்சகா உட்பட ஐந்து வகையான குருமார்களை பூஜை மண்டபத்துக்கு விரத மந்திரங்களின் மூலம் அழைத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை ஆகியனவற்றை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்தார்.

நிறைவாக சங்கரமடத்தில் தொன்று தொட்டு மேற்கொள்ளப்படும் பாரம்பரிய பூஜையான சாலக்கிராமத்துக்கு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நிறைவு பெற்று பக்தர்களுக்கு வியாச அட்சதை பிரசாதமாக வழங்கப்பட்டது.

முதல் நாள் விரத பூஜை நிகழ்ச்சியை காண்பதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இந்த விரதத்தை, மடாபதிபதிகள் இருவரும், செப்., 26ம் தேதி பவுர்ணமி தினத்தில் நிறைவு செய்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, மேலாளர் சுந்தரேச அய்யர், முகாம் மேலாளர் ஜானகிராமன் ஆகியோர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar