Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ... திருவோண விரதம்; பெருமாளை வழிபட தீராத நோய் தீரும் மற்றும் ஆயுள் கூடும்! திருவோண விரதம்; பெருமாளை வழிபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர் கோயில் 18ம் படி கருப்பண்ணசாமி நடை திறப்பு; பக்தர்கள் குவிந்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகர் கோயில் 18ம் படி கருப்பண்ணசாமி நடை திறப்பு; பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2026
12:07

மதுரை அழகர் கோயில் 18ம் படி கருப்பண்ணசாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாத பெளர்ணமி அன்று மட்டுமே நடை திறக்கப்படும் . அதன்படி நேற்று ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு நடை திறப்பு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


மதுரை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி அழகர் மலையைக் காக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார். இவருக்கு உருவம் கிடையாது, சந்தனம் பூசப்பட்ட கோபுரமாக வணங்கப்படுகிறார். இக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி அன்று காலையில் அழகர் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அன்று பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு, பரம்பரை பூசாரிகளால் கதவுகளுக்கு குடம் குடமாக சந்தனம் பூசி, நீண்ட பூமாலைகள் அணிவித்து, நீண்ட அரிவாள்கள் சாத்தி வழிபாடுகள் நடைபெற்றது. ஆண்டு முழுவதும் மூடப்பட்டிருக்கும் 18 ம் படி கருப்பணசாமி சன்னதி கதவுகள் வருடத்திற்கு ஒருமுறை ஆடி பெளர்ணமி அன்று மட்டுமே திறக்கப்படுவது குறிபடித்தக்கது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar