Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் தெய்வச் சேக்கிழார் விழா; ... முத்துப்பல்லக்கில் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் வீதியுலா முத்துப்பல்லக்கில் வடமதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதியில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதியில் இந்த ஆண்டு இரண்டு  பிரம்மோற்சவம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2026
02:08

திருமலை: இந்த ஆண்டு திருமலையில் இரட்டை பிரம்மோற்சவங்கள் நடைபெறவுள்ளதால், பக்தர்கள் ஆன்மீக வெள்ளத்தில் மூழ்கவுள்ளனர்.


திருமலை ஸ்ரீவாரி திருக்கோயிலில் ஒன்பது நாட்கள் நடைபெறும் ஸ்ரீவாரி சாலக்கட்ல (வருடாந்திர) பிரம்மோற்சவம் செப்டம்பர் 15 முதல் 23 வரையிலும், நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 12 முதல் 20 வரையிலும் பக்திச் சிறப்புடன் கொண்டாடப்படவுள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவத்தின் தொடக்கமாக செப்டம்பர் 14 மாலை அங்குரார்ப்பணம் (முளைப்பாலிகை இடுதல்) நிகழ்ச்சியுடன் விழாக்கள் தொடங்கும். தினமும் வாகன சேவைகள் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மீண்டும் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரையிலும் நடைபெறும்.


வாகன சேவைகளின் அட்டவணை:


செப்டம்பர் 15, 2026 (செவ்வாய்க்கிழமை) மாலை: த்வஜாரோஹணம் (கொடியேற்றம்) இரவு 9:00 மணி: பெரிய சேஷ வாகனம்


செப்டம்பர் 16, 2026 (புதன்கிழமை) காலை 8:00 மணி: சிறிய சேஷ வாகனம், மதியம் 1:00 - 3:00 மணி: ஸ்நபன திருமஞ்சனம், இரவு 7:00 மணி: ஹம்ச வாகனம் (அன்ன வாகனம்)


செப்டம்பர் 17, 2026 (வியாழக்கிழமை) காலை 8:00 மணி: சிம்ம வாகனம், இரவு 7:00 மணி: முத்துப்பந்தல் வாகனம்


செப்டம்பர் 18, 2026 (வெள்ளிக்கிழமை), காலை 8:00 மணி: கல்பவிருட்ச வாகனம் ,இரவு 7:00 மணி: சர்வ பூபால வாகனம்


செப்டம்பர் 19, 2026 (சனிக்கிழமை) காலை 8:00 மணி: மோகினி அவதாரம், மாலை 6:30 - இரவு 11:30 மணி: கருட வாகனம்


செப்டம்பர் 20, 2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8:00 மணி: ஹனுமந்த வாகனம், மாலை 4:00 மணி: ஸ்வர்ண ரதம் (தங்க ரதம்), இரவு 7:00 மணி: கஜ வாகனம் (யானை வாகனம்)


செப்டம்பர் 21, 2026 (திங்கள்கிழமை) காலை 8:00 மணி: சூரியப்பிரபை வாகனம், மதியம் 1:00 - 3:00 மணி: ஸ்நபன திருமஞ்சனம், இரவு 7:00 மணி: சந்திரப்பிரபை வாகனம்


செப்டம்பர் 22, 2026 (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணி: ரதோற்சவம் (தேரோட்டம்), இரவு 7:00 மணி: அஷ்வ வாகனம் (குதிரை வாகனம்)


செப்டம்பர் 23, 2026 (புதன்கிழமை) காலை 6:00 - 9:00 மணி: சக்ரஸ்நானம் (தீர்த்தவாரி), இரவு: த்வஜாவரோஹணம் (கொடியிறக்கம்)

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar