உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2026 04:08
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் 150-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டிய, உலக அமைதிக்காக முளைப்பாரி விழா ஆண்டுதோறும் நடந்து வரும் வழக்கம். 18ம் ஆண்டு முளைப்பாரி விழாவில் உளுந்தூர்பேட்டை அடுத்த புல்லூர், பள்ளியந்தாங்கல், சாத்தனூர், ஆசனூர், ஆர்.ஆர்.குப்பம், மூலசமுத்திரம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆசிரமத்தில் ஸ்ரீ சாரதாம்பாள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.