அச்சிறுபாக்கம் கெங்கையம்மன் கோவிலில் பால்குடம் விழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2026 10:08
அச்சிறுபாக்கம்: கீழாமூர், கெங்கையம்மன் கோவிலில் 108 பால்குடம் எடுத்தல் விழா நேற்று விமரிசையாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே உள்ள கீழாமூர் கிராமத்தில் பழமையான கெங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கூழ்வார்த்தல் விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு பழனியம்மன் அழைப்பு நடந்தது. அதை தொடர்ந்து கோவிலின் குளக்கரையில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின், கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு பழனியம்மன் அழைப்பு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கங்கையம்மன், வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக, ஆக., 4ல், ஆடி மாதம், நான்காவது வாரம் செவ்வாய் கிழமையன்று கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தல் விழா நடைபெற உள்ளது.