Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பெருக்கு; கோவை கோவில்களில் ... ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவாசக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற தடை இல்லை; சுப்ரீம்கோர்ட்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற தடை இல்லை; சுப்ரீம்கோர்ட்

பதிவு செய்த நாள்

03 ஆக
2026
12:08

மதுரை ; திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நிராகரித்தனர்.


மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கமான இடங்களை தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.


மேல்முறையீடு: இந்த வழக்கில், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு ஐகோர்ட் மதுரைக் கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார் , ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது தீபம் ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. 


விசாரணை; இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 03) திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நிராகரித்தனர். * தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மனுக்கள் முழுமையாக விசாரித்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்கப்படும். மேலும் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில் 6 மாதம் கழித்து அப்பீல் செய்வது ஏன்? என்றும், தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து பதில் அளிக்குமாறு மனுதாரர் ராமரவிக்குமார், மதுரை கலெக்டர் பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar