Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தரைகாத்த காளி கோவிலில் சாகை ... விக்கிரவாண்டி பெரியாண்டவர் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா விக்கிரவாண்டி பெரியாண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் தண்ணீர் இன்றி வறண்ட காவேரி ; பம்பு செட்டு மூலம் நீராடி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் தண்ணீர் இன்றி வறண்ட காவேரி ; பம்பு செட்டு மூலம் நீராடி வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஆக
2026
12:08

மயிலாடுதுறை; தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா ஆடி 18 நாள் நீர்நிலைகளை குறிப்பாக காவிரியை போற்றி வணங்கும் விழாவாகவும், இயற்கையான நீர் வளர்த்தால் விவசாயம் பெருகியதற்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் விவசாயம் செழித்து வாழ்வு வளம் பெற வேண்டி  காவிரி ஆற்றங்கரையில் மணல் மற்றும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து காதோள கருகமணி மற்றும் பழங்கள் வைத்து பூஜிப்பது வழக்கம். புதுமண தம்பதியர் பூஜைகள் செய்து தாலி பிரித்து சேர்த்து திருமண மாலைகளை நதியில் விடும் நிகழ்வும், சுமங்கலி பெண்கள் புதிய மஞ்சள் நானில் தாலி மாற்றிக்கொண்டு மஞ்சள், குங்குமம், மங்களப் பொருட்களை பரிமாறிக் கொண்டு அன்னதானம் வழங்குவது சிறப்பு. 


இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வராததால் காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கலை இழந்து காணப்பட்டது. காவிரியில் தண்ணீர் வறண்டு கிடப்பதால்  விவசாயிகள் காவிரி நீரை வரவேற்று வணங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதிலும் இருந்து புதுமண தம்பதிகள் பூம்புகாரில் காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடத்திற்கு குடும்பத்தினருடன் வந்து தாலி பிரித்து சேர்த்து திருமண மாலைகளை கடல் நீரில் விட்டு சென்றனர். சொற்ப எண்ணிக்கையிலான சுமங்கலி பெண்கள் பூம்புகார் கடற்கரைக்கு வந்து புதிய மஞ்சள் நானில் தாலி மாற்றிக் கொண்டனர். குடும்பத்து பெரியவர்கள் காவிரி சங்கமத் துறையில் வைத்து பூஜைக்கப்பட்ட மஞ்சள் கயிறுகளை  இளையவர்களுக்கு கட்டி விட்டனர்.  மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நகராட்சி சார்பில் பம்பு செட்டு மூலம் விடப்பட்ட தண்ணீரில் நீராடிய புதுமண தம்பதிகள் மற்றும் சுமங்கலி பெண்கள் காவிரி கரையில் பூஜைகள் செய்து தாலி பிரித்து சேர்த்தும், புதிய மங்கள நானில் தாலி மாற்றிக் கொண்டும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar