Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுப்பர்பாளையம் கன்னிமார் ... திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பரணி விழா; காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2026
01:08

மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்   ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான  தேவார பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பக்தர் மார்க்கண்டேயருக்காக எமனை வதம் செய்து மீண்டும் உயிர்பித்த  அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் அபிராமி பட்டர் அவதரித்து அபிராமி அந்தாதியை இயற்றியது சிறப்பு. அபிராமி பட்டருக்காக தை அமாவாசையை அபிராமி அம்மன் பௌர்ணமி ஆக்கிய புராண வரலாற்றை உள்ளடக்கிய  இக்கோவிலில் அபிராமி அம்மனின் ஆடிப்பூர உற்சவம்  கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை முன்னிட்டு அபிராமி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தின் முன்பு விநாயகர், அபிராமி அம்பாள், சண்டிகேஸ்வரர்,  சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத  கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டு   பஞ்சமுக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை ராமலிங்கம், மகேஷ் குருக்கள்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 10 நாள் உற்சபத்தின் முக்கிய நிகழ்வாக வரும் 13-ஆம் தேதி திருத்தேர் உற்சவம், 14ம் தேதி  தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், இன்று நடந்த ஆடிப்பரணி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேசுவரர் கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா அம்மன் சன்னதி முன்பாக உள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar