Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சியில் உலக நன்மை வேண்டி ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2026
04:08

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத மந்திரங்கள் முழங்க பர்வத வர்த்தினி அம்பாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது


பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் மாசி மகா சிவராத்திரி மற்றும் ஆடி திருக்கல்யாண உற்சவம் ஆகிய இரண்டு விழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாக்கள் ஆகும். ஆடி திருக்கல்யாண உற்சவத்தின் முதல் நாளான இன்று  கன்னி லக்னத்தில் பர்வதவர்தினி அம்பாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க மேல வாத்தியங்களுடன் ஆடி திருக்கல்யாணம் உற்சவர் கொடியேற்று நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது


இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் 12ம் தேதி ஆடி அமாவாசை அன்று தீர்த்தவாரி உற்சவமும் இரவு நேரத்தில் பர்வத வர்த்தினி அம்பாள் வெள்ளி ரத வீதி உலாவும் 13ஆம் தேதி தேரோட்டமும் 15 ஆம் தேதி திருக்கல்யாண மாலை மாற்று வைபவமும் 16ஆம் தேதி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள திருக்கோவில் மண்டபத்தில் ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளுக்கு திரு கல்யாண வைபவம் 21 ம் தேதி ராமநாதசுவாமி திருக்கோவில் நடை அடைக்கப்பட்டு சுவாமி அம்பாள் கெந்த மாதன பருவதத்தில் மண்டகப்படி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


இன்று நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் உள்ளூர் பக்தர்கள் என ஏராளமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை வழிபட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், இன்று நடந்த ஆடிப்பரணி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேசுவரர் கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா அம்மன் சன்னதி முன்பாக உள்ள தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்   ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar