விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனையொட்டி நேற்று காலை 7மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர், ஆழத்து விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், சிறப்பு தீபாராதனையடுத்து, கொடிமர பூஜைகள் செய்து, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் உட்பிரகார வலம் வந்து அருள்பாலித்தனர். மாலை உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்வாக, வரும் 13ம் தேதி தேரோட்டம், 14ம் தேதி ஸ்படிக பல்லக்கில் அம்மன் வீதியுலா, 15ம் தேதி காலை 5:00 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு நுாற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.