பதிவு செய்த நாள்
01
பிப்
2013
11:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், நேற்று, மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் நடந்தது. திருச்செந்தூர் கோயில் மூலவர் சுப்பிரமணியர், தை மாதம் உத்திர நட்சத்திரத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்டார். நேற்று, தை உத்திரத்தை முன்னிட்டு, மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் நடந்தது. கோயில்நடை, அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, சுவாமிக்கு, 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 7:30 மணிக்கு, கும்ப கலச பூஜை நடந்தது. காலை 9:15 மணிக்கு, மூலவர், உற்சவர், பெருமாள், விமான கலசங்களுக்கு, கும்ப புனித நீரால் அபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். மாலையில், சுவாமி குமரவிடங்கப்பெருமான், அம்பாளுடன், தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு, மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.