Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று ஐந்து ... திருப்போரூர் கந்தசுவாமி கோவில் முழுநேரம் திறந்திருக்க எதிர்பார்ப்பு திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மன் கோவில் ராஜ கோபுரப்பணிகள் மும்முரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொண்டத்து காளியம்மன் கோவில் ராஜ கோபுரப்பணிகள் மும்முரம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2026
11:08

பெருமாநல்லுார்: பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலின் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பக்தர்கள் மற்றும் உபயதாரர்களின் பங்களிப்புடன் பல கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளில், 66 அடி உயரமுடைய ஐந்து நிலை ராஜகோபுரம் தற்போது உருவெடுத்து வருகிறது.

கோவிலை முழுமையாக புனரமைக்கும் திட்டத்துக்கு அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ரூ.3.60 கோடி மதிப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம், ரூ.6.34 கோடியில் திருமாளிகை பக்தி மண்டபம், ரூ.2.42 கோடியில் வசந்த மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதற்கட்டமாக, 66 அடி உயரமும், 43 அடி நீளம், 23 அடி அகலமும் கொண்ட ராஜகோபுரத்தின் கட்டுமானம் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து தரமான கற்கள் வரவழைக்கப்பட்டு, 20-க்கும் மேற்பட்ட சிற்பிகள் குழுவாக இணைந்து பாரம்பரிய கல் சிற்பப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்திர வானம், பத்ம ஜெகதி, பட்டியல், கண்டம், கபோத பட்டியல் உள்ளிட்ட கோபுரத்தின் அடிப்பகுதிக்கான சிற்ப வடிவமைப்புகள் இயந்திர உதவியுடன் துல்லியமாக செதுக்கப்பட்டன. தற்போது அவை கோபுரத்தின் பேஸ் மட்டத்திற்கு மேல் பொருத்தப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் முதல், கோபுரத்தின் முதல் நிலையை உருவாக்கும் கண்டம் மற்றும் கபோத பட்டியல் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக ஸ்தபதி தெரிவித்தார். இதன் மூலம் ராஜகோபுரத்தின் மேல்தள கட்டுமானம் அடுத்த கட்டத்தை எட்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று இரவு, மலையப்ப சுவாமி தனது தேவியர்களான ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar